10 கிராமங்களின் குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் நிவாரண உதவிகள் வழங்கல்

10 கிராமங்களின் குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் நிவாரண உதவிகள் வழங்கல்
X

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் ஜெ.ஸ்டீபன் சுதாகர் மழை வெள்ள பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , இருங்காட்டுக் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்னிலையில், அறங்காவலர் ஸ்டீபன் சுதாகர் அத்தியாவசியப் பொருட்களை பாதிப்பிற்குள்ளான இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், பென்னலூர், காட்ரம்பாக்கம், தண்டலம், கடுவன்சேரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை, மணிமங்கலம், கட்சிப்பட்டு மற்றும் நெமிலி ஆகிய 10 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கினார்.

சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல கட்டங்களாக நிவாரண உதவிகளை வழங்கியது.

இந்த நிவாரண உதவிகள் குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் கிம் கூறுகையில் ‌, எந்தவொரு இயற்கைப் பேரிடரில் இருந்தும் மீண்டெழ தமிழ்நாட்டிற்கு உதவுவதில் ஹூண்டாய் பெரும் அக்கறை கொண்டுள்ளது.

25 ஆண்டுகளாக எங்களது இல்லமாகத் திகழும் தமிழ்நாட்டின் மக்கள் மீதான நன்மதிப்பின் வெளிப்பாடாக இந்த செயலை நாங்கள் கருதுகிறோம். எங்களது உலகளாவிய கொள்கையான 'மானுடத்திற்கான முன்னேற்றம்' என்பதன் அடிப்படையில் இத்தகைய சோதனைக் காலங்களில் தொடர்ந்து நாங்கள் தமிழக அரசு மற்றும் மக்களுடன் இணைந்து நிற்போம் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!