ஸ்ரீபெரும்புதூர் இளம்பெண் மரணம் வழக்கில் திடீர் திருப்பம்

ஸ்ரீபெரும்புதூர் இளம்பெண் மரணம் வழக்கில் திடீர் திருப்பம்
X

இளம்பெண் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் கள்ளக்காதலி உள்படம் : கொலையுண்ட பிரியா

கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் ஆத்திரத்தில் கள்ள காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே கடந்த 18 தேதி இரவு 23 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் ,அந்தப் பெண்ணிடம் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த பிரியாவை 17 வயதில் திருமணம் செய்த பிரியாவின் கணவர் நவீனை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

காவல்துறை தங்களுடைய பாணியில் விசாரித்த பொழுது நவீனும், நவீனின் கள்ளக்காதலி கல்பனாவும் சேர்ந்து பிரியாவை கொன்றதை ஒத்துக் கொண்டுள்ளார்.

போலீசார் விசாரணையில் பிரியா தனக்கு பிறந்த குழந்தை இறந்ததிலிருந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகவும் அது பிடிக்காததால் பலமுறை பிரியாவை கண்டித்ததாகவும், அதன் பின்பு நவீன் பிரியாவை பிரிந்து 34 வயதான ஏற்கனவே திருமணமான கல்பனாவோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்பனா மற்றும் கல்பனாவின் சகோதரன் காளிதாசன் என்பவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததாகவும் இதனால் நாங்கள் பிரியாவை சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து வந்து மது கொடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்த பின்பு பிரியாவின் சடலத்தை ஸ்ரீபெரும்புதூர் அருகே வீசிவிட்டு சென்று விட்டோம் என்றும் நவீன் கூறியுள்ளார்.

கல்பனாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!