காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை; கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை தேக்கம்
விற்பனையின்றி வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் பொம்மைகள்.
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழா ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது.
தமிழகத்தில் குறிப்பாக யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமணர்கள் இவ்விழாவினை கோகுலாஷ்டமி என சிறப்பாக கொண்டாடுகின்றனர் . தற்போது பல பஜனை கோயில்களில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் என நடைபெறுகின்றன.
இவ்விழாவில் வீடுகள் முழுவதும் தூய்மைப்படுத்தி, மாவிலை தோரணம் கட்டி, கிருஷ்ணர் சிலை வைத்து வீட்டு வாசலிருந்து பூஜை அறை வரை குழந்தைகளின் இரு கால் பாதங்களினை மாவில் தோய்த்து பதிவிட்டு ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்பது போல அலங்காரம் செய்து பலவகையான பட்சணங்கள் செய்து படையலிட்டு கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது சாலையோர வியாபாரிகள் அழகிய வண்ண வண்ண சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரூகிறது. இதனால் சாலையோரங்களில் நீர் தேங்கி பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் சிலை விற்பனை தேக்கமடைந்துள்ளது.
விநாயகர் சிலை செய்ய பல விதிகளுக்கு உட்பட்ட நிலையில், இதுபோன்ற சிறிய வகையில் செய்த சிலைகள் விற்க கூட இயற்கை சதி செய்தவதால் தங்கள் வாழ்வாதாரம் பெருத்த கேள்வியாகியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு ஆண்டாக சிறு வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில். பெரும் சிரமம் கண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu