சுங்குவார்சத்திரத்தில்:குட்கா மற்றும் ரூ 5.20 லட்சம் பறிமுதல்: 2பேர் கைது.

சுங்குவார்சத்திரத்தில்:குட்கா மற்றும் ரூ 5.20 லட்சம்  பறிமுதல்: 2பேர் கைது.
X

குட்கா கடத்தியதாக கைது செய்யப்பட்டவரகள்

தடைசெய்யப்பட்டகுட்கா பான்பொருட்களை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

தமிழகத்தில் புற்று நோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் பான் மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்தும் அதை நடத்துபவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு பைபாஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளர் தலைமையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது..

அப்போது, வேலூரிலிருந்து சென்னைக்கு சென்ற மினி வேன் மற்றும் காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ரூபாய் 5.54 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து குட்கா மற்றும் ரொக்கப் பணமாக ரூ. 5.2 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த விஜயராம் மற்றும் வஸ்னாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் கொண்டு சென்ற வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸார் மேல் விசாரணை செய்து வருகின்றனர்..


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!