பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் ஊராட்சி தணிக்கை இணை இயக்குனர் கோபி , கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .
ஊராட்சி செயலர் கார்த்திக் கிராம ஊராட்சியின் வரவு செலவினங்களை வாசித்தார் அதன்பின் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் கடந்த 67 நாட்களாக தங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் நிலையில் கிராம சபை கூட்டத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக விமான நிலையம் வேண்டாம் என திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதாக கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து வட்டாட்சியர் சமாதானத்தில் ஈடுபட்டும் பொதுமக்கள் இத்த தீர்மானத்தை கொண்டு வந்தே தீருவது என உறுதியுடன் இருந்ததால் தீர்மானம் கிராம ஊராட்சி மன்ற தீர்மான புத்தகத்தில் எழுதப்பட்டு அனைவரும் கையொப்பமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu