ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேர் கைது
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பிளேட்டுகளை திருடியதாக கைது செய்யப்பட்ட நபர்கள்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் லிஃப்ட் தொழிற்சாலையில் 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் அமைந்துள்ளது ஜான்சன் லிஃப்ட் தனியார் தொழிற்சாலை.

இத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்கள் காணவில்லை என கம்பெனியின் துணை பொது மேலாளர் ராஜா என்பவர் கடந்த 12ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதியப்பட்டு உடனடியாக பொருட்களை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்பேரில் அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் இடையார்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமன், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஜெயவேல் மற்றும் அருண்குமார் , மேல்கொண்டையூரை சேர்ந்த சிவா, திருவள்ளூரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் கூட்டாக இணைந்து இத்திருட்டை செய்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவர்களிடம் இது பொருள்களை மீட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!