ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் தீ விபத்து: ₹5கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் தீ விபத்து:  ₹5கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
X

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

சிப்காட் வளாகத்தில் அட்டை பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் மூலப் பொருட்கள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பூங்காவில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அலுவலகத்தில் மட்டும் ஒரு சிலர் பணிசெய்து வந்தனர். சுமார் 4 மணி அளவில் திடீரென உள்ளே உள்ள மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட அலுவலக ஊழியர்கள் உடனே வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். இருந்தபோதும் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென ஆலை முழுவதுமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. உடனே அருகிலுள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறை இருவரும் சேர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்திற்குள் உள்ளே இருந்த மூலப்பொருட்கள் அட்டை ரோல்கள் மிஷினரி என அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

அதனைத்தொடர்ந்து இந்த அதீத தீயால் நிறுவனத்தின் மேற்கூரை முழுவதுமாக சேதமடைந்து கீழே சரிந்து விட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருளடைந்து புகை மண்டலமாய் காணப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தால் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!