தாம்பரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் துப்பாக்கியால் சுட்டு கைது
போலீஸாரை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடி சச்சினை துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் காவல் நிலைய பகுதியில் பல்வேறு கொலை, வழிப்பறி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த சச்சின் என்ற ரவுடி தொடர்ந்து தாம்பரம் மற்றும் தாம்பரம் சுற்றுப்புற பகுதிகளில் கல்குவாரி முதலாளிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களை போனில் மிரட்டி பணம் பறித்து வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இவ்வாறு தொழிலதிபர்களையும் வியாபாரிகளையும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலையும் தலைமறைவாக உள்ள ரவுடி சச்சின் மற்றும் அவரது கூட்டாளிகளையும் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே உள்ள மறைவான இடத்தில் சச்சினும் அவனது கூட்டாளிகளும் அவர்களுக்கு எதிரியாக உள்ள ரவடி கும்பலை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்ட இருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் காவல் ஆய்வாளர் ஜெ. சிவக்குமார் தலைமையிலான தனிப்டையினர் சோமங்கலம் பகுதியில் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தனியார் பொறியியல் கல்லூரி அருகே 28.09.2022ந் தேதி நீல நிற YAMAHA R15 இரு சக்கர வாகனத்தில் வந்த சச்சின் மற்றும் பரத் ஆகியோரை மடக்கி பிடிக்க முயற்சித்தபோது சச்சின் தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை பிடிக்க வந்த போலசார் மீது வீசினார்.
அந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காத காரணத்தால் சச்சின் தான் வைத்திருந்த கத்தியால் தன்னை பிடிக்க வந்த காவலர் பாஸ்கர் என்பவரை கத்தியால் வெட்டியதால் அவருக்கு இடது கையின் மேல் பகுதியில் வெட்டு காயம் ஏற்பட்டது.
மேலும் சச்சினும் பரத்தும் மற்ற காவலர்களையும் தாக்க முயற்சித்தபோது காவல் ஆய்வாளர் சிவக்குமார் பாதுகாப்பிற்காக தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சச்சின் காலில் சுட்டு அவரைக் கட்டுபடுத்தியுள்ளார். பரத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காலில் குண்டடிபட்ட சச்சின் அரசு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சச்சின் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் பாஸ்கர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய ரவுடி பரத்தை போலீசார் தேடி வருகினறனர்.
கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu