குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்குக்குகள் பெற அளித்த போலி தங்க காசால் பரபரப்பு
வாக்களிக்க அளிக்கப்பட்ட போலி தங்ககாசுகள்.
குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் 2500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இங்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சி ஆதரவுடனும் சுயேட்சை சார்பில் பலர் போட்டியிட்டனர்.
நேற்று வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட சாரதா விநாயகம் மற்றும் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வார்டு உறுப்பினர் வேட்பாளர் சித்திரா அகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என தங்க நாணயங்களை கொடுத்துள்ளனர். அதைப் பெற்ற வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இன்று அதனை அடகு வைக்க சென்றபோது அது பித்தளை என தெரியவந்தது.
வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்தால் தெரிந்துவிடும் என்ற காரணத்தினால் வாக்கு செலுத்த செல்லும்போது வாக்காளர்களை அழைத்து அவர்கள் கைகளில் மறைவாக தங்க நகை என எந்த பித்தளையை கொடுத்துள்ளனர்.
இதனால் வேறு ஒருவருக்கு வாக்களிக்க இருந்த வாக்காளர்களும் அதிமுக மற்றும் அவர்களை சார்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு வாக்களித்து விட்டதாகவும் போலி காசு அளித்து நூதன முறையில் வாக்குகள் பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu