கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை : மது பிரியர்கள் புகார்
காஞ்சிபுரம் மாவட்டம் , ஶ்ரீபெரும்புதூரில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.(பைல் படம்)
காஞ்சிபுரம் மாவட்டம் , ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் கடை எண் 4475 கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மதுபானங்கள் வாங்க வருபவர்களிடம் அதிக தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
குவார்ட்டருக்கு 30 ரூபாயும், 750 மில்லி மதுபானத்திற்கு 50 ரூபாயும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு மதுபான விலையை உயர்த்தாத நிலையில் ஏன் இக்கடையில் மட்டும் விலை அதிகரித்து இருக்கிறீர்கள் என்று கேட்டு தினத்தோறும் மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் பணியாளர் களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த கடையில் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் சிலர் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் உள்ள கடையில் மட்டும் மதுபானங்களின் பாட்டில் குறிப்பிட்டுள்ள விலையை விட பாட்டிலின் அளவிற்கேற்ப ஏற்றவாறு ரூ.30 முதல் ரூ.60 வரை விலை அதிகரித்து விற்பனை செய்கின்றனர்.
மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தாதபோது, இக்கடையில் மட்டும் மதுபானங்களின் விலையை உயர்த்தியது ஏன் என்று தெரியவில்லை.
இதனால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கலால்துறை அதிகாரிகள், இந்த டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானங்களை விற்பனை செய்யவும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதனால் தினக்கூலி வேலை செய்து வரும் மது பிரியர்கள் மது விலை உயர்ந்து விற்கப்படுவதால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu