அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் ஐக்கியம்

அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் ஐக்கியம்
X
ஸ்ரீபெரும்புதூர், வல்லம் பகுதி அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் , வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். முன்னாள் வல்லம் ஊராட்சிமன்ற தலைவரான இவர் அதிமுகவில் மேலவை பிரிதிநியாகவும் செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில் உதயகுமார் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இருந்து விலகி ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ மொளச்சூர் ரா.பெருமாள் முன்னிலையில் அம்மா முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

அமமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி உதயகுமார் உள்ளிட்டோரை ரா.பெருமாள் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags

Next Story
how to bring ai in agriculture