தொழிற் கல்வி கற்கும் மாணவர்களுக்காக வெட்டு தோற்றம் பொருந்திய என்ஜின்கள் நன்கொடை
தொழிற் கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் எஸ்.கணேஷ் மணி , தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர். கிர்லோஷ் குமாரிடம் வெட்டு தோற்றம் கொண்ட என்ஜின் வழங்கியபோது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் (HMIF) நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள 24 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (ITI), மாணவர்களின் பணியாற்றக்கூடிய திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெட்டு தோற்றம் பொருந்திய என்ஜின்களை இன்று நன்கொடையாக வழங்கியது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் எஸ். கணேஷ் மணி , தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர். கிர்லோஷ் குமாரிடம் வழங்கினார். அப்பொழுது, டி.ராஜசேகர், கூடுதல் இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் டி. சரவணன் மற்றும் 24 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களும் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் கணேஷ் மணி கூறுகையில் , "திறன்மிக்க பணியாளர்கள் தேவையை மனதில்கொண்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுடன் இணைந்து, நவீன உள்கட்டமைப்புகளை வழங்கி, மாணவர்களுக்கு தொழில்துறைக்குத் தேவைப்படும் திறனை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில், மோட்டார் மெக்கானிக் கல்வி பயிலும் சுமார் 12,000 மாணவர்கள் என்ஜின் தொழில்நுட்பத்தில் செயல்முறை அனுபவத்தைப் பெறுவார்கள் என்றார்.
திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, HMIF, இந்தியாவில் உள்ள 47 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உதவும் நோக்கில் கைகோத்துள்ளது.வருடத்திற்கு சராசரியாக, 500க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியாவெங்கும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu