வாங்க ஒரு " கை" பார்போம். அழகிரி பிரச்சார வாகனத்தில் ஸ்டிக்கர்

வாங்க ஒரு  கை பார்போம்.  அழகிரி பிரச்சார வாகனத்தில் ஸ்டிக்கர்
X
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பிரச்சார வாகனத்தில் " வாங்க ஒரு கை பார்ப்போம் " என வித்தியாசமான வாசக ஸ்டிக்கர் ஒட்டியள்ளது ..

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை போட்டிருக்கிறார். இவரை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி காலை 11 மணியளவில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

வாக்குகள் சேகரிக்க பயன்படுத்தப்பட்ட பிரச்சார வாகனத்தில் ராகுல்காந்தி படத்தின் அருகே " வாங்க ஒரு கை பார்ப்போம் " என வாசகம் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, வித்தியாசமாக இருந்தது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு