70,000 பேருக்கு இன்று கொரோனா நிவாரணம் ரூ.2000
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண நிதிகள் மே 15 முதல் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 653 நியாய விலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 252 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 வீதம் மொத்தம் 144.10 கோடி வழங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தில் முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் இத்திட்ட துவக்க விழா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இன்று ஓரே நாளில் சுமார் 70 ஆயிரம் அரிசி அட்டைதாரர்களுக்கு காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்திரமேரூர் , குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் நிவாரணம் வழங்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu