ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: ஓவிய ஆசிரியர் கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது

ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: ஓவிய ஆசிரியர் கொலையில்  மனைவி, கள்ளக்காதலன் கைது
X

கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி, கள்ளக்காதலன்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓவிய ஆசிரியர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த பகுதியில் கள்ளக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் இவர் சென்னை தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷோபனா இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் அன்பழகனை காணவில்லை என அவரது உறவினர்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர் காணாமல் போன நாள் என்று அவரது மனைவி ஷோபனாவும் தலைமறைவானார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறை ஷோபனாவை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிவபுரத்தை சேர்ந்த எலக்ட்ரிஷன் தர்மராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறி அதனால் அன்பழகனை கொலை செய்து ஆற்றங்கரைப் பகுதியில் புதைத்து உள்ளதாக தெரிவித்தார்

இதையடுத்து தர்மராஜாவை கைது செய்து அன்பழகன் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதன் பேரில் இன்று 12 மணி அளவில் அவரது உடல் வட்டாட்சியர் மற்றும் உடற்கூறு சிறப்பு மருத்துவர் முன்னிலையில் காவல்துறை பணிகளை மேற்கொள்ள உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் கள்ளக்காதலால் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருவது சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!