காற்றில் பறக்கும் திமுக தலைவர் உத்தரவு: மவுனம் கலைக்காத அமைச்சர்

திமுக பேரூராட்சி தலைவராக பதவியேற்ற நிலையில் கூட்டரங்க அறையில் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திலேயே அமர்ந்துள்ளார்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் மற்றும் நகராட்சி பேரூராட்சி தலைவர்களுக்கான கூட்டணி ஒதுக்கீட்டை திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. ஆனால் சில இடங்களில் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் கூட்டணிக் கட்சிகளை ஏறி மிதித்து பதவியைக் கைப்பற்றிக் உள்ளது.
இதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தவறு செய்தவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரில் சந்திக்கவேண்டும் என இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார். அதை தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ளும் போதும் கழக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையாகவே விடுத்தார்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியைக் கைப்பற்றிய திமுக நகர செயலாளர் தனது மனைவியை பேரூராட்சி தலைவியாக ஆக்கியுள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மௌன போராட்டமும் இந்திரா காந்தி சிலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ஸ்ரீபெரும்புதூர் நகர திமுகவினரின் செயல்களை கண்டித்தனர்.
இந்நிலையில் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திலேயே அமர்ந்துள்ளார். செயலை கண்டிக்க வேண்டிய அமைச்சரோ மௌனமாக இருப்பதும், பல்வேறு அழுத்தங்கள் காங்கிரஸ் சார்பில் கொடுத்த பின்னும் பதவி விலக மறுக்கும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
கட்சித் தலைவர் கூறிய பின்பும் கடமையை செய்யாமல் அதன் கண்ணியத்தையும் காப்பாற்றாமல் கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாகவே செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் திமுகவின் செயல்பாடுகள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu