சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவர்  உயிரிழப்பு
X

சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்  வினோத் கண்ணன்

ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் வினோத் கண்ணன் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் கண்ணா( 18.)

இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.இவர் இருசக்கர வாகனத்தில் ஒரகடம் சென்று அங்கிருந்து கல்லூரி வாகனத்தில் செல்வது வழக்கம்.இந்நிலையில் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ஒரகடம் நோக்கி பண்ருட்டி அருகே வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் கல்லூரி செல்வதற்காக வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் சென்ற டிராக்டர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற ஒரகடம் காவல்துறையினர் வினோத் கண்ணா சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை தேடிவருகின்றனர்.மேலும் சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story