ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு
பால் நல்லூர் கிராமத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி
காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு மேற்கொண்டார்.
தத்தனூர் ஊராட்சியில் ரூ. 11 இலட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.17 இலட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முழு சுகாதார திட்டத்தில் கட்டப்பட்ட தனிநபர் கழிவறைகள், குண்டு பெரும்பேடு ஊராட்சியில் 11 இலட்சம் மதிப்பில் தோண்டப்பட்டிருந்த திறந்தவெளி கிணறு, அரசு பள்ளி சுற்றுச்சுவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து பால்நல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், மேலும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை பார்வையிட்டார்.
மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பன்ருட்டி ஊராட்சியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஆட்சியர் ஆர்த்தி கள ஆய்வு மேற்கொண்டு, பணிகள் குறித்த விவரம் மற்றும் பணிகளின் தரங்கள் ஆகியவற்றை உறுதிசெய்து, நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை செயற்பொறியாளர் திரு.அருண் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu