ஆபாச படம் பதிவிடுவதாக சிறுமியை மிரட்டிய, தனியார் பள்ளி மாணவன் கைது

ஆபாச படம் பதிவிடுவதாக சிறுமியை மிரட்டிய, தனியார் பள்ளி மாணவன் கைது
X

சிறையில் அடைப்பு (பைல் படம்)

பள்ளி சிறுமியின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி சிறுமியை மிரட்டிய, தனியார் பள்ளி மாணவனை, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் பள்ளி சிறுமியிடம் வலைத்தளத்தின் மூலமாக நட்புக் கொண்டு சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட போவதாக மிரட்டி சிறுமியிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பெற்றதாக ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் தனியார் பள்ளி மாணவன் மேற்படி செயலில் ஈடுபட்டது தெரிய வர மாணவனை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான மின்னணு தடயங்களை சேகரிக்கப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எம்.சுதாகரன் கூறியபோது, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியை மேம்படுத்த மட்டுமே சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும்,

அறிமுகமில்லாத அல்லது அந்நிய நபர்களின் தனிப்பட்ட விவரத்தையோ அல்லது புகைப்படத்தையோ எக்காரணத்தைக் கொண்டும் சமூகவலை தளங்களில் பதிவிட வேண்டாம்.

மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் எனவும் , இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்