ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆடிக்கரை அபேஸ் செய்த மர்ம நபர்கள் : 13 நேரத்தில் பிடித்த போலீசார்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆடிக்கரை அபேஸ் செய்த மர்ம நபர்கள் : 13 நேரத்தில் பிடித்த போலீசார்
X

காஞ்சிபுரம் அருகே  போலீசாரால் கைது  செய்யப்பட்ட கார் திருடர்கள்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆடிக்கரை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் 13 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து அசத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நயப்பாக்கத்தில் ரவி என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த லேப்-டாப் , மூன்று எல்இடி டிவிகள் மற்றும் அவருடைய ஆடி காரையும் திருடி சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்த ரவி விடம் நடைபெற்ற சம்பவங்களை காவல்துறை கேட்டறிந்து உடனடியாக அவரது காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் சைபர் கிரைம் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது அவரது இல்லத்தில் குளிர்சாதன பெட்டியை சரி செய்ய வந்த நபர் விஜயசந்திரன் மீது சந்தேகம் கொண்ட காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது.

இவருக்கு உதவிய பிரவீன் லோகேஷ் பிரகாஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆடி கார் மூன்று எல்இடி டிவிகள் , ஒரு லேப்டாப் என 90 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏசி இயந்திரம் பழுது பார்க்க வந்த மெக்கானிக் ஆசையால் அவருடன் கூட்டணி சேர்ந்து கத்தியுடன் வீட்டில் நுழைந்ததும் வீட்டின் உரிமையாளர் அறையில் நாய்கள் இருந்ததும் ஆடி காரிலுள்ள ஜிபிஎஸ் கருவி குறித்து தங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!