உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க தயார்: முருகன் பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் (பைல் படம்)
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் முன்கள பணியாளர்களுங்கு அரிசி , மளிகைபொருட்கள், காய்கறிகள் , சேலை உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் பள்ளி மைதானத்தில் மாவட்டதலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் கலந்து கொண்டு புற்கள் பணியாளர் 200க்கும் மேற்பட்டோருக்கு நல திட்ட உதவி பொருட்களை வழங்கினார்.
இதில் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
தமிழக சட்டசபையில் தமிழக ஆளுநரின் உரை முதல்வரை துதி பாடுவதாகவே உள்ளது. தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றுக்கு கூட செயல்திட்டங்களில் இடம் பெறவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்யமுடியாது என தெரிந்து மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தான் இருந்து போட்டியிட தயாராக உள்ளோம்.
பெட்ரோல் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மாநில நிதி அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே நிலுவையில் உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல கோடி ரூபாய் மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்தும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதி செயலை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் அதியசம்குமார் , ஜீவா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu