மொளச்சூரில் 3 மத முறைப்படி பூமி பூஜை செய்து புதிய சாலை பணி துவக்கம்

மொளச்சூரில் 3 மத முறைப்படி பூமி பூஜை செய்து புதிய சாலை பணி  துவக்கம்
X

ரூ.10 லட்சம் மதிப்பில் போடப்பட உள்ள புதிய சாலை பணிக்காக சர்வ மத பூமி பூஜை நடத்தப்பட்டது.

மொளச்சூர் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியின் கீழ் மூன்று மத வழிபாட்டுடன் சாலைப்பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலராக தி.மு.க.வைச் சேர்ந்த ஆண்டனி வினோத் உள்ளார்.ஒன்றிய கவுன்சிலரின் நிதியின் கீழ் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பத்து லட்ச ரூபாயை , அம்பேத்கர் நகர் பகுதியில் மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய சாலை பணிக்காக ஒதுக்கினார் .

அனைத்து மதத்தினரும் அப்பகுதியில் வாழ்ந்து வருவதாலும் , அவர்களின் செயலை வரவேற்கும் விதத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஆண்டனி வினோத் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்களை வைத்து சர்வ மத பூமி பூஜை செய்து மத நல்லிணக்கத்துடன் புதிய சாலை பணியை துவக்கியது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai solutions for small business