டாஸ்மாக் ஊழியர்களுக்கு கத்திகுத்து - ஒருவர் பலி; ஒருவர் காயம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கத்திகுத்து - ஒருவர் பலி; ஒருவர் காயம்
X

டாஸ்மாக் ஊழியர் கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார். 

ஒரகடம் அருகே, கத்திக்குத்தில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் இறந்தார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் பகுதியில், 4109 எண் கொண்ட அரசு மதுபான கடை உள்ளது. இதில், வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி துளசிதாஸ் விற்பனையாளராகவும், நத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவர் உதவியாளராக பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு இரவு 10 மணி அளவில் விற்பனை கணக்கை சரிபார்த்த பின், விற்பனையான பணத்தை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு, துளசிதாஸ் இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கரையில் இருந்து சத்தம் கேட்டு, ராமு வந்து பார்க்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள், துளசிதாசன் தாக்கிக் கொண்டிருந்தனர். ராமு கூச்சலிடவே ராமுவையும் மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், நிலைகுலைந்த துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் ராமு உடனடியாக கடையில் பணிபுரியும் மேலாளர் முத்துக்குமாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஒரகடம் காவல்துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துளசிதாசன் மீட்க முயற்சித்த போது ஏற்கனவே அவர் இறந்து போனதும், அவரது உடலை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு அனுப்பி வைத்தும், ராமு பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இக்கடையில், அவ்வப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலர் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி மதுபானங்கள் வாங்கி செல்வதும், வழிப்பறி செய்தல் வழக்கமாக இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story