மருத்துவகல்லூரி அருகே கஞ்சா விற்பனை -இளைஞர் கைது

மருத்துவகல்லூரி அருகே கஞ்சா விற்பனை -இளைஞர் கைது
X

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம், கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தண்டலம் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது பிடிபட்டவர் திருவண்ணாமலையை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (20) என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கஞ்சா விற்பனை செய்த பகுதி அருகே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை , அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ‌என பல உள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future