ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
X

 ஸ்ரீ பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.2, 23,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். இங்கு வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் இங்கு அதிகளவில் வாகன பதிவுகளுக்கு லஞ்சம் பெறுவதாக தொடர் புகார் வந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு துறையினர் நேற்று டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 12பேர் கொண்ட குழுவினர்மாலை 5 மணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கணக்கில் வராத ரூ.2.23 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் , மோட்டார் வாகன ஆய்வாளர் , அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரவு வரை விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!