சுங்குவார்சத்திரம் அருகே செல்போன் திருடிய 5 பேர் கைது

சுங்குவார்சத்திரம் அருகே செல்போன் திருடிய  5 பேர் கைது
X

சென்னை பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐந்து ஆந்திர மாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டபோது

சென்னை பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில வாலிபர்கள் 5 பேரை கைது செய்து 120 செல் போன்களை பறிமுதல் செய்தனர்

சென்னை மற்றும் புறநகர் சென்னை பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்து அவரது கார்களில் கதவுகளில் உள்ளே மறைத்து வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஐபோன் உள்ளிட்ட 120 செல்போன்களை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் அதிகளவு செல் போன் திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களான தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான செல்போன் திருட்டு தொடர்பான புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஆன ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைதூரம் பயணிக்கும் வாகனங்களில், இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தி உறங்கும் பொழுது அவர்களிடமிருந்து, அவ்வப்போது செல்போன் கொள்ளை போவதாக தொடர்ந்து புகார் எழுந்து இருந்த வண்ணம் இருந்தது.

தொடர்ந்து செல்போன்கள் அதிகளவு திருடப்படுவதால் குறிப்பிட்ட கும்பல்களின் செயலாகவே இது இருக்கும் என போலீசார் சம்பந்தப்பட்ட திருடர்களை பிடிப்பதற்காக பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வந்தனர்.இந்த நிலையில் பெசன்ட் நகர் பகுதியில் சேர்ந்த ஒருவர் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிப்பதற்காக வந்த பொழுது, அவர் வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐ-போன் திருடப்பட்டு உள்ளது.

இதனை கண்ட நபர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். தனது நண்பர்கள் உதவியுடன் தொலைந்த தனது செல்போனை கண்டுபிடிக்க தொடர்ந்து ட்ராக் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் இருக்கும் லொகேஷனை கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக இது குறித்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

செல்போன் சிக்னல் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அதனை தொடர்ந்து சென்ற போலீசார் வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது காரின் கதவில் உள்ளே மறைத்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான ஐபோன் உள்ளிட 120 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

பல செல்போன்கள் அலுமினியம் ஃபாயில் மூலம் சுருட்டப்பட்டு, செல்போன் சுற்றி டேப்பை சுற்றி காரில் டோர்களுக்கு இடையே சாதுரியமாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த நான்கு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நான்கு பேரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபு(25), கிருஷ்ணா(40), பவான் (19), பிரேம்குமார் (23), சதிஷ்(28) என தெரிய வந்தது. இவர்கள் பல ஆண்டு காலமாக, செல்போன் திருடுவதையே முக்கிய தொழிலாக வைத்து வந்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு வாரம் திட்டமிட்டு நூற்றுக்கணக்கான செல்போன்களை திருடிக் கொண்டு ஆந்திரா பகுதிகளுக்கு செல்வதும், அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலம் அனைத்து செல்போன்களையும் விற்றுவிட்டு அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு, சில நாட்கள் எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டு , மீண்டும் இதே சதி திட்டத்தை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கெனவே செல்போன் திருட்டு வழக்கு நிலவில் இருப்பதாகவும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நான்கு பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா