அதிமுக ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

அதிமுக ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்
X

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்டகவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு ஆறாவது வார்டுக்கு உட்பட்டது எடையார்பாக்கம், துளசாபுரம், குணகரம்பாக்கம் மற்றும் செல்லம்பட்டிடை கிராமங்கள் ஆகும்.

இங்கு அதிமுக சார்பில் முதுகலை பட்டதாரியான M.நிஷாந்த் மேற்கண்ட கிராமங்களுக்கான ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இன்று எடையார்பாக்கம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கிராம ஊராட்சியின் செயல்பாடுகள் என்ன என்பதை மக்களுக்கு புரியும் வண்ணம் எளிதில் எடுத்துரைத்து அதன் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறினார்.

மேற்கூறிய அனைத்தையும் தான் செய்வேன் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு போட்டியிடும் சிங்கிலிபாடி ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!