ஸ்ரீபெரும்புதூர் ஓஎஸ்ஆர் நிலங்களில் முறைகேடா : சமூக ஆர்வலர்கள் சந்தேகம்
பைல் படம்
சென்னை புறநகர் வளர்ச்சி மற்றும் மாவட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வளர்ச்சி என காரணம் கூறி அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை பல வருடங்களாக விவசாயம் மேற்கொள்ளவில்லை என காரணம் குறித்து வருவாய்த் துறையிடம் நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வரும் வழக்கம் கடந்த 15 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுபோன்ற நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முற்படும் போது அப்பகுதியில் திறந்த வெளி இட ஒதுக்கீடு என சுமார் 2,500 சதுர அடி இடம் அப்பகுதி கிராம ஊராட்சி அல்லது பேரூராட்சி , நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அரசு விதியாகும்.
இந்த நிலையில் சென்னை புறநகரின் அடுத்த வளர்ச்சியாக உள்ள பகுதி ஸ்ரீபெரும்புதூர் ஆகும். இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது. இதற்கான நிலம் அரசு கையகப்படுத்தி தொழிற்சாலைகளுக்கு அளிப்பது சிப்காட் வளாகங்களை ஏற்படுத்துவது என தனி அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் சாலை பணிகளுக்காகவும் சில நேரங்களில் விவசாய நிலங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு கையகப்படுத்துவது வழக்கம். அப்போது இதில் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்ட இடங்களும் அடங்கும்.
இந்நிலையில் இதுபோன்ற கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள OSR என கூறப்படும் திறந்த வெளி இட ஒதுக்கீட்டு பகுதிகளினை நிலை குறித்து தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதுபோன்ற இடங்களை அரசு அலுவலர்கள் உதவியுடன் அரசுக்கே விற்று மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து தெளிவான விளக்கங்களை பெற இயலவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu