விருப்பமான கல்வி தேர்வே சாதிக்கும் திறன் கொண்டது: மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு உயர்கல்வி குறித்த கையேட்டினை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021- 22 ஆம் ஆண்டு கல்வியாண்டில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூந்தண்டலம் தனியார் பொறியியல் கல்லூரியில் வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையேற்று மாணவ, மாணவர்களிடம் உரையாடினர். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தெரிவிக்கும் வகையில் விளக்கங்கள் இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சி இறுதியில் கிடைக்கும் என்பது உறுதி. உயர்கல்வி தொடர்பான விவரங்கள் மற்றும் விளக்கங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தைச் சார்ந்த வல்லுனர்களால் தரப்பட உள்ளது. நீங்கள் விரும்பும் கல்வியை விரும்பும் வாரே பெற்று பயனடையும், உங்கள் பெற்றோரின் துணையுடன் உயர்வடையும். உங்கள் கல்லூரி கனவு திட்டம் உறுதுணையாகவும் நனைவாகவும் இந்நிகழ்ச்சி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை சேர்ந்த 8 துறை வல்லுனர்கள் மூலம் இந்த வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைக் கல்வியை முடித்த 750க்கும் மேற்பட்ட மாணவி, மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். மேலும் உயர் கல்வி வழிகாட்டி கையேடுகள் மாவட்ட ஆட்சியர் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் பிரேமலதா உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu