ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில்  சென்ற  பஸ்சில் திடீர் தீ விபத்து
X

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தீ பற்றி எரிந்த பேருந்து.

A sudden fire accident in a bus on the road near Sriperumbudur-சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

A sudden fire accident in a bus on the road near Sriperumbudur-சென்னை, போரூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்னி பேருந்தின் முன்பக்க டயரிலிருந்து கரும்புகை வெளியிட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது.

திடீர் புகையை கண்ட ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி தப்பினார். அதற்குள் காற்று திசை காரணமாக தீ மள மள என பேருந்து முன் பக்கம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.

பேருந்து தீப்பிடித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக பேருந்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். பேருந்தின் முன் பகுதியில் முற்றிலும் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டது.

பரபரப்பாக காணப்படும் சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து எறிந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பாக இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!