ஹுன்டாய் பவுண்டேஷன் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு

ஹூண்டாய் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை அர்ப்பணித்து, அதன் சாவியை கிராம ஊராட்சி மன்றத்தலைவரிடம் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைத்த ஹூண்டாய் பவுண்டேஷன் நிறுவன அதிகாரிகள்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹுண்டாய் கார் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேசன் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.75 லட்சத்தில் சமுதாய நலக்கூட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து,சமுதாய நலக்கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகிகள் கணேஷ்மணி, சரவணன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், காட்டரம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தம்மாள் தாஸ், மாவட்ட கவுன்சிலர் குண்ணம் ராமமூர்த்தி, பொடவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாரவி, ரியல் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் லாரன்ஸ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அங்கன்வாடி மையம் சாலை, தெருவிளக்கு, சுகாதார குடிநீர் நிலையம் அமைத்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது 4000 சதுர அடியில் சுற்று சுவருடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu