தாம்பரம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி

தாம்பரம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.
Today Accident News -தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்ட் அருகே, லாரியில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து கடப்பா கல் ஏற்றிக் கொண்டு வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சம்பவ இடத்தில் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் கடப்பா கல், லாரியின் மீது அமர்ந்திருந்த சிவா ரெட்டி, வரதராஜீ, ஆகியோர் மீது விழுந்ததில் உயிரிழந்தனர்.
கடப்பா கல்லில் சிக்கியிருந்த ஓட்டுநர் லட்சுமணய்யா(36), அவரது மகன் வாசு, மற்றும் சுப்பா நாயுடு(50), ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.கடப்பா கல்லில் சிக்கியவர்களை தாம்பரம் தீயணைப்பு துறையினர் மீட்டனர்
தற்போது சாலையோரம் கவிழ்ந்து விழுந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu