ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்திலும் அதிமுக வேட்பாளர்கள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் திமுகவிற்கு தேவையான தனி பெரும்பான்மை கிடைக்க சுயேட்சை வேட்பாளர்களை வளைத்துப் போட்டு விடும் என நம்பப்படுகிறது அவ்வாறு நடந்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் திமுக வசமாகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 1வது வார்டு ஹேமாவதி, எட்டாவது வார்டு கருணாநிதி, ஒன்பதாவது வார்டு உஷா, 10வது வார்டு ஆன்டனி வினோத்குமார், 13வது வார்டு மல்லிகா, 14வது வார்டு மாலதி, 15-ஆவது வார்டு கோமதி, 16வது வார்டு பரமசிவன் ஆகிய திமுகவினர் எட்டு பேரும், அதுபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக 11 வது வார்டில் களமிறங்கிய வாணிஸ்ரீ. இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தியாகராஜ், 7வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் எல்லம்மாள் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

3வது வார்டு வேட்பாளர் சாந்தகுமாரி, 5-ஆவது வார்டு வேட்பாளர் செந்தில் ராஜன், ஆறாவது வார்டு வேட்பாளர் இஷாந்த், 12வது வார்டு வேட்பாளர் யுவராணி ஆகிய 4 பேரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் என 16 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story
Similar Posts
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
எல்லாமே மாறப்போகுது.. ஒரே கிளிக்கில் Super App...! ரயில் பயணிகளே!
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ, பெண் போலீஸ்  உயிரிழப்பு
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
முருகன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
உத்திரமேரூர் அருகே பள்ளியில் தீபாவளி பட்டாசு வெடித்ததால் தீ விபத்து
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
காஞ்சிபுரத்தில் காவல்துறை பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள் கண்காட்சி
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
சுகர் பேஷன்டா? தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டாலும் சுகர் பிரச்னை வராமல் இருக்க ஒரு வழி இருக்கு..!
தீபாவளிக்கு இதெல்லாம் செய்யணுமா? பாதுகாப்பா பட்டாசு வெடிங்க மக்களே..!