/* */

மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

ஸ்ரீபெரும்புதூரில் மாற்று கட்சியை சேர்ந்த 1500 பேர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர்  முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
X

ஸ்ரீபெரும்புதூரில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலை செயலாளர் மு.வேலு தலைமையில் அக்கட்சியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோரும்,

கொளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த முனுசாமி தலைமையில் அக்கட்சியினர் சுமார் 500 பேரும்,

வெங்காடு ஊராட்சிமன்ற முன்னாள் துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் தேமுதிக வை சேர்ந்த சுமார் 200 பேரும், இருங்காட்டுக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகோபால் தலைமையில் அதிமுகவினர் 100 பேரும்,

பென்னலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.சி.பாபு தலைமையில் அக்கட்சியினர் சுமார் 150 பேர்,

பென்னலூர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த கோபால் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 100 நபர்கள் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1500 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமைச்சர் தா.மோ, அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இனணந்தனர். இந்திகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார்,

வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை அமைப்பாளர் குன்னம் முருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினரை சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார்.

இதில் திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன், திமுக நிர்வாகிகள் செந்தில்தேவராஜ், வளர்புரம் ஜார்த், பொடவூர் ரவி, வெள்ளாரை ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 1 Aug 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்