ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பொது மக்களின் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள்
தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் உள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு தெரிவித்துள்ளதாக கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளது. அந்த கோரிக்கைகள் பற்றி பார்ப்போமா?
1. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலன் குறித்து அதில் நவீன வசதி கொண்ட மருத்துவமனையாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனயை மாற்ற வேண்டும்.
2. ஸ்ரீபெரும்புதூர் நுழைவு வாயில் முதல் சிங்கப்பெருமாள் கோயில் திரும்பும் சாலை வரை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் போக்குவரத்து நிலவும் வகையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பிட வேண்டும்.
3. சுங்குவார்சத்திரம், குன்றத்தூர் படப்பை உள்ளிட்ட பகுதிகளில் புதிய குளிரூட்டப்பட்ட பால் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
4. சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 50,000 நபர்கள் கூடும் பகுதி என்பதால் அப்பகுதியில் நவீன கழிவறைகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும்.
4. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையம் போல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும்.
5. வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அடையாறு ஆற்றின் பாலத்தை மேலும் 200 அடிக்கு அகலப்படுத்தி வெள்ள நீர் எளிதாக வெளியேற வசதியாக பாலம் அமைக்கப்பட வேண்டும்.
6. செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை பூங்கா மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுற ஏதுவாக சுற்றுலா தளமாக அமைக்க வேண்டும்.
7. பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகளவில் பல்வேறு இடங்களில் புதியதாக வளர்ந்து வருவதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் படப்பை அல்லது ஒரகடம் பகுதியில் புதிய பேருந்து பணிமனை அமைக்க வேண்டும்.
8. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் திருக்கோயில் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் வல்லக்கோட்டை முருகன் கோயில் குன்றத்தூர் நாகேஸ்வர ஸ்வாமி மற்றும் சுப்ரமணியசாமி திருக்கோயில் என பல புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளதால் இதனை சுற்றுலா தளமாகவும் அறிவித்து பக்தர்களுக்கு வசதியாக தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபங்கள் , சுற்றுலாத்துறை சார்பில் இதை பார்க்கும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
9. குன்றத்தூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு புதிய தாலுகா மற்றும் நீதிமன்றம் , சார்நிலை கருவூலங்கள் அமைக்க வேண்டும்.
10. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் விலை மதிப்புமிக்க நிலங்கள் என வீட்டுமனை பட்டா வழங்கிட பிறப்பிக்கப்பட்ட தடை ஆணையை ரத்து செய்து கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளும் குறித்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை சார்பில் பத்து முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu