ஸ்ரீ ராமநவமி - ராமர் சீதாதேவியுடன் அனுமனுக்கு தரிசனம்

ஸ்ரீ ராமநவமி  -  ராமர்  சீதாதேவியுடன் அனுமனுக்கு தரிசனம்
X

ஸ்ரீ ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஊர்வலமாக வந்து அனுமன் ஆலயத்தில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திலிருந்து ஸ்ரீ ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு ராமர், சீதை , லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக சென்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனுமன் ஆலயத்தில் தங்கி தனது சீடரான அனுமன் உள்ளிட்ட பக்தர்களுக்கு நேரில் சென்று காட்சியளித்தனர்.பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திற்கு செல்வார். ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் பல்வேறு வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு