ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
X

குன்றத்தூர் அருகே ஏரியில் தவறி விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குன்றத்தூரை அடுத்த புது வட்டாரம், திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் உஸ்மான். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் மற்றும் இவரது மகள் அப்சனா(11) மகன் சுகில் (7) ஆகிய மூன்று பேரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் 6வது மதகின் அருகே நின்று ஏரி நீரை பார்த்துக்கொண்டிருந்த போது அப்சனா எதிர்பாராதவிதமாக தவறி ஏரிக்குள் விழுந்ததாகவும், அவரைக் காப்பாற்ற அவரது தம்பி சுகில் ஏரிக்குள் குதித்ததாகவும், இருவரும் நீரில் மூழ்கியதை கண்ட உஸ்மான் பிள்ளைகள் இருவரையும் காப்பாற்ற நீரில் குதித்துள்ளார்.இதில் 3 பேரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி உஸ்மான் உடலை மீட்டு பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய அப்சனா மற்றும் சுகில் ஆகிய இருவரின் உடல்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் குன்றத்தூர் போலீசார் உஸ்மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேரும் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!