நகை வியாபாரியிடம் வழிப்பறி - மேலும் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாபாரியிடம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரை சேர்ந்தவர் மகேந்திரன்.நகை வியாபாரி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 11 ம் தேதி நகையுடன் ஆட்டோவில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார் . அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் அவரிடமிருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றனர் .இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் இந்த வழக்கில் திருக்கழுக்குன்றம் மானாம்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் தமிழ் மற்றும் கதிரவன் ஆகிய இரண்டு காவலர்கள் உட்பட 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 50 கிராம் தங்க நகை 9 லட்சம் பணத்தை மீட்டனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய இருவரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது, இருவரும் வியாசர்பாடியை சேர்ந்த கலைச்செல்வம் மற்றும் திவாகர் என்பதும் இருவரும் நகை வியாபாரி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 35 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu