பள்ளி மூடுவதாக தகவல் - பெற்றோர்கள் சாலை மறியல்

பள்ளி மூடுவதாக தகவல் - பெற்றோர்கள் சாலை மறியல்
X

காஞ்சிபுரத்தில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி மூடுவதாக தகவல் வந்ததையடுத்து, பெற்றோர்களுடன் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென பள்ளி நிர்வாகம் பள்ளியை இழுத்து மூடுவதாக கேள்விப்பட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து இன்று பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளி நிர்வாகம் இந்தப் பள்ளியை நாங்கள் 11 வருடமாக நடத்தி நஷ்டம் அடைந்து விட்டதாகவும் , வேறு நிர்வாகத்திடம் இந்த பள்ளியை ஒப்படைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் மிக மனச்சோர்வுடன் பள்ளியின் வாசலில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில் இருபுறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்று முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர்,மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!