விஷ வாயு தாக்கி மூன்று பேர் பலி

விஷ வாயு தாக்கி மூன்று பேர் பலி
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் உணவு தயாரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.அங்கே இன்று காலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் , பாக்கியராஜ் என்பவரும் அவருடன் அமரம்பேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒருவருக்கு விஷவாயு பாதிப்பு ஏற்பட்டு அவரை காப்பாற்ற மற்ற இருவர் தொட்டியில் இறங்கும்போது மூவரையும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.

இது குறித்து சோமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் இருந்த 3பேரின் உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்ட துணை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!