வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 77 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே நகர தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சிறுபான்மை அணி துணைத்தலைவர் ஐயப்பன் கலந்து கொண்டு வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற மத்தியஅரசை வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.மேலும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கநாதன் நாயுடு , பவுல் ஆரோக்கியம் , அம்மன் குமார், வரதன் வாசுதேவன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி