விரைவில் விண்ணில் பாயும் மாணவர்களின் செயற்கைகோள்

விரைவில் விண்ணில் பாயும் மாணவர்களின் செயற்கைகோள்
X

காஞ்சிபுரம் அருகே மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள் வரும் பிப்ரவரி 27 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குன்னம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அடங்கிய குழுவினர் தயாரித்த நானோ செயற்கைகோள் வரும் பிப்ரவரி 27ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான தரைதள கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ தலைவர் சிவன் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.இதுகுறித்து கல்லூரி இயக்குனர் மரிய வில்சன் கூறும் போது , இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் பள்ளி கல்லூரி மாணவிகளை கொண்டு செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக எங்கள் கல்லூரி இதில் பங்கேற்று உள்ளது. பல்துறைகளில் பயிலும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ரூ. 2 கோடி மதிப்பில் 460 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள் உருவாக்கி வரும் பிப்ரவரி 27 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள் சுற்றுசூழல் மற்றும் நீர் ஆதாரங்களை கண்காணிக்க பெரிதும் உதவும் என தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது