காஞ்சிபுரத்தில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரத்தில் இன்று மாபெரும்  தடுப்பூசி முகாம்
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 44 இடங்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி பொதுமக்களை கடந்த ஒரு மாத காலமாக அல்லல்படுத்தி வந்தது. பரவலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரத்தில் 150க்கும் கீழ் எண்ணிக்கை நபர்களே தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . தொற்று பாதிப்பை முற்றிலும் குறைக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த பாதுகாப்பு என மத்திய , மாநில அரசுகள் அறிவித்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் 9 , குன்றத்தூரில் 11, வாலாஜாபாத்தில் 6, உத்திரமேரூரில் 7, காஞ்சிபுரத்தில் 8 மற்றும் புறநகரில்3 என ஆறு பகுதிகளில் 44 சிறப்பு முகாம்களில் 5750 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஊசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இத்தருணத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story