காலணி திருடி செல்லும் இளைஞர்: சிசிடிவி காட்சியில் அம்பலம்

காலணி திருடி செல்லும் இளைஞர்:  சிசிடிவி காட்சியில் அம்பலம்
X

காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள துணிக்கடையில் காலணியினை  திருடும் இளைஞர்.

காஞ்சிபுரம் துணிக்கடையில் புத்தாடை எடுக்க வந்த இளைஞர் புதிய காலணியை திருடி செல்லும் சிசிடிவி காட்சி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின்‌ எண்ணம் செயல் ஒவ்வொன்றும் அதிர்ச்சி அளித்து வருகிறது. இவையெல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதை பார்க்கும் போது அதை காணும் போது இதெல்லாம் ஒரு பொழப்பா என அறுவறுப்பாக தோன்றும் நிலையும் , இளைஞரின் மன ஓட்டம் ஏன் இதுபோன்ற செயலை செய்ய தூண்டுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் புத்தாடை எடுக்க வந்த இளைஞர் புதிய காலணி அடியை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் என்றாலே கோவிலுக்கும் பட்டுக்கும் பெயர்பான காஞ்சிபுரத்தில் பிரபல துணைக்கடைகள் பல உள்ளன அந்த வகையில் காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர்களுக்கு என பிரத்தியேகமாக உள்ள துணிக்கடையில் நேற்று பொதுமக்கள் பொங்கல் பண்டிகை ஒட்டி துணி எடுக்க குவிந்த வண்ணம் இருந்தனர் .

இந்நிலையில், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றுள்ளார். அப்பொழுது தனது காலணியை கடையின் முன்பு விட்டுவிட்டு உள்ளே சென்று துணி எடுத்து வந்துள்ளார்.

பின்பு துணி எடுத்து முடிந்தவுடன் தனது காலணியை தேடி வந்தபோது அவரது காலனி காணவில்லை என தெரிகிறது. அவர் அந்த காலணியை ரூ2500 ரூபாய் கொடுத்து வாங்கியதாக தெரிவிக்கிறார்.

இதனையடுத்து கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆராய்ந்து பார்க்கும்பொழுது , வேறொரு இளைஞர் துணிக்கடையில் இருந்து துணி எடுத்து விட்டு வெளியே வந்து எந்த காலணி நன்றாக உள்ளது என்று பார்த்துவிட்டு சென்று விடுகிறார்.

மீண்டும் அந்த இளைஞன் தனது காலணியை வண்டி அருகே விட்டு விட்டு வந்து புதியதாக உள்ள இந்த காலனி கடகடவென காலில் அணிந்து கொண்டு சென்று விடுகிறார்.

தற்போது புத்தாடை எடுக்க வந்து புது காலனியை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!