'சரக்கு' அடிக்க பணம் தராததால் தொடரும் பாசக்கார கொலைகள்

சரக்கு அடிக்க பணம் தராததால் தொடரும் பாசக்கார கொலைகள்
X

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம். கைது செய்யபட்ட மகன் கார்த்திகேயன்

காஞ்சிபுரத்தில் மது அருந்த பணம் தராததால் தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் கண்ணன்(65). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை அருகே தனது மகளுடன் இளநீர் வியாபாரம் செய்து வருகின்றார்

இவரது மகன் கார்த்திகேயன் (28) கடந்த 26 ஆம் தேதி மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் தராததால் தனது தந்தை கண்ணனை கார்த்திகேயன் சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த கண்ணன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சைகாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கண்ணன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை கொலை செய்து தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் இன்று கைது செய்தனர்.

மது அருந்த மகனுக்கு தந்தை பணம் தராததால் தந்தையை கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மது போதைகளில் தந்தை , தாய் ஆகியோரை தாக்குவது ,கொலை செய்வது என்பது பாசக்கார மகன்களின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

Tags

Next Story