காஞ்சிபுரத்தில் காணமல் போன இளைஞரை கிணற்றில் சடலமாக மீட்டனர் -காவல்துறை விசாரணை

காஞ்சிபுரத்தில் காணமல் போன  இளைஞரை  கிணற்றில் சடலமாக மீட்டனர்  -காவல்துறை விசாரணை
X
காஞ்சிபுரத்தில் காணமல் போன இளைஞரை விவசாயக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். அவரது மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவர் மணிகண்டன்(25). இவர்‌ கடந்த 3 நாட்களாக இவரை காணவில்லை என அவரதுபெற்றோர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

இறந்து போன மணிகண்டன்

புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்ப்பூர் மதுக்கடை அருகே உள்ள விவசாயக் கிணற்றில் இளைஞர் ஒருவரது சடலம் மிதப்பதாக பாலுசெட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணம் குறித்து காவல் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!