பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது..!

மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி முதல் கால யாகசாலை பூஜை திருக்குட ஊர்வலம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற போது.
காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
கண்ணபிரான் பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது வாங்கிவர துரியோதனனின் சபைக்குச் சென்றபோது, துரியோதனன் கிருஷ்ணன் அமருவதற்கு மூங்கிலால் ஆன ஒரு பொய்யாசனம் அமைத்து கிருஷ்ணனை கொல்ல அதற்கு அடியில் மல்லர்களை ஆயுதபாணிகளாய் வைத்தான்.
ஸ்ரீகிருஷ்ணன் சிம்மாசனத்தில் அமரும்போது பெரிய விசுவரூபம் எடுத்து மல்லர்களை அழித்தார். கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக தூது போனதால் பாண்டவதூதன் என்ற திருநாமம் பெற்றுள்ளார்.
இங்கு தாயார் பெயர் ருக்மிணி. இந்த திவ்யதேசத்தை பேயாழ்வார், பூதத்தாழ்வார் திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் பாடகம் என மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
இங்கு ஜெனமேஜயனும், ஹரிதமுனியும் விசுவருப தரிசனம் கிடைக்கப் பெற்றார்கள் என புராணங்கள் கூறுகின்றன. அவ்வகையில் புகழ்பெற்ற ஸ்ரீ பாண்டவர் தூத பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று நிறைவுற்றது.
இந்நிலையில், மகா கும்பாபிஷேக பணிகள் நேற்று வாஸ்து சாந்தி, அங்குரார்பணத்துடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, இன்று முதல் கால பூஜை காலை 6 மணிக்கு தொடங்கியது. மேலும் யாகசாலையில் வைக்கப்படும் திருக்குடங்கள் வளாகத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து யாகசாலையில் வைக்கப்பட்டு முதல் கால பூஜை நிறைவுற்றது.
மாலை இரண்டாம் கால பூஜை , அதனை தொடர்ந்து ஆறு கால பூஜைகள் நடைபெற்று 15ஆம் தேதி காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு செய்யப்பட்டு , ராஜகோபுரம் மூலவர் விமானம் உள்ளிட்ட அனைத்திற்கும் மகா சம்போரஷம் என கூறப்படும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் பாண்டவதூத பெருமாள் வீதி உலா வர உள்ளார். மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu