மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்படுமா?

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்படுமா?
X
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

விஞ்ஞான பரிமாண வளர்ச்சி காரணமாக இன்று செல்போன் இல்லாத நபர்கள் குறைவு . குறிப்பாக இளைஞர்கள் இதன் அடிமையாகவே மாறிவிட்டனர் சில ஆண்டுகளாகவே.

இந்நிலையில் வாடிக்கையாளரை கவர் புதிய விளையாட்டு செயலிகள் வர தொடங்கி அது உயிரை மாய்க்கும் அளவிற்கு மன அழுத்தம் உண்டாக்கி உயிரிழந்த நிலையில் அவர்களை‌ சார்ந்தோர் பட்ட துன்பங்கள் சொல்ல அளவில்லை .

இதைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு விளையாட்டு செயலிகளுக்கு தடை விதித்தது.

மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை செய்து உத்தரவிட்டது.

சிறிது காலம் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளி நேரம் துவங்குவதற்கு முன்பு, இடைவேளை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுள் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் குழுவாக இணைந்து விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர்.

பள்ளி மாணர்களின் நடவடிக்கை மற்றும் அவரது பைகளை சோதனை மேற்க்கொண்டால் மட்டுமே இதை முற்றிலும் தவிர்க்க முடியும். இதே கவனம் இருந்தால் வகுப்பு பாடங்களின் கவனம் சிதறுகிறது.

இதை முற்றிலும் தவிர்க்க மீண்டும் கடுமையான நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!