உண்டியல் வசூல் குறித்து தகவல் வெளியிட தயக்கம் ஏன் ? பக்தர்கள் கேள்வி.

உண்டியல் வசூல் குறித்து தகவல் வெளியிட தயக்கம் ஏன் ? பக்தர்கள் கேள்வி.
X

பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் உண்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது .

ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் திறந்து காணிக்கை விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடப்படாததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு புண்ணிய தளங்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. அவ்வகையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயில் உட்பிரகாரத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் தனது காணிக்கையை செலுத்த தற்காலிக உண்டியல் இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒன்றில் நிரம்பிய உடனே இந்து சமய அறநிலைத்துறையினர் அனைத்து உண்டியலும் அதிகாரி முன்னிலையில் திறந்து பக்தர்கள் இடமிருந்து பெறப்பட்ட காணிக்கையை எண்ணப்பட்டு வருகின்றன.

மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை ஏகாம்பரநாதர் கோவிலில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் செயல் அலுவலர் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட உண்டியலை திறந்து எண்ண தொடங்கினர்.

அதில் 3 உண்டியல்களில் கடந்த முறை பெய்த வடகிழக்கு பருவ மழையால் உண்டியலில் உள்ளே மழை நீர் சென்று தேங்கியுள்ளதால் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கை ரூ.500 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகள் என பல்லாயிரம் கணக்கான ரூபாய் நோட்டுகள் முழுவதும் மழை நீரில் தேங்கி நனைந்து நாசமானது தெரியவந்தது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கையை இந்து சமய அறநிலை துறை அலட்சியத்தால் நனைந்து பயன்படாமல் வீணாவதால் பக்தர்களும் வேதனை அடைந்து இது குறித்து செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

மேலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் எந்த ஒரு திருக்கோயில்களில் உண்டியல் எண்ணபட்டால் அதில் காணிக்கையாக பெறப்பட்ட ரொக்கப் பணம் , வெளிநாட்டு கரன்சி, தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்கள் குறித்தும் பெறப்பட்ட தொகையின் மதிப்பு அறிக்கை பத்திரிகைகளுக்கு whatsapp மூலம் தெரிவிக்கப்பட்டு அது குறித்த செய்தி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும்.

ஆனால் இந்து சமய அறநிலையைத் துறை சார்பில் ஏகாம்பரநாதர் திருக்கோயில் உண்டியல் எண்ணப்பட்ட விவரங்கள் ஏதும் அதிகாரபூர்வமாக செய்தியாளர்களுக்கு அறிவிக்கவில்லை இதுகுறித்து செய்திகளும் வெளிவரால்தான் பக்தர்கள் இதுகுறித்து அச்சம் தெரிவித்தும் , அதிர்ச்சி அடைந்தும் வருகின்றனர்.

தற்போது இத்திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story