மாநில நெடுஞ்சாலையில் ராட்சத பேனர்கள் கட்டுப்படுத்தப்படுமா?

மாநில நெடுஞ்சாலையில் ராட்சத பேனர்கள் கட்டுப்படுத்தப்படுமா?
X

சூறாவளி புயலில் சிக்கி சேதம் அடைந்த மின் கம்பம்

காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாநில நெடுஞ்சாலைகளின் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாலாஜாபாத் செங்கல்பட்டு சாலை வாலாஜாபாத் ஓரகடம் சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ந்து வரும் நகர்ப்புற வீடுகள் திட்டத்தின் கீழ் பல்வேறு வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டு அதற்கான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வீசிய சூறைக்காற்றில் பல்வேறு மரக்கிளைகள் ஆங்காங்கே விழுந்து மின் தடை ஏற்பட்டது. மேலும் தேசிய மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தங்கள் விளம்பரங்களை ராட்சத பேனர்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

படப்பை அருகே தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் சூறாவளி சூழலில் சிக்கி சாய்ந்த நிலையில் உள்ளது

இதில் படப்பை அருகே தனியார் நிறுவனம் சொந்தமான குடியிருப்பு பகுதி வாசலில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் சூறைக்காற்றில் முற்றிலும் சாய்ந்து அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது சாய்ந்தது.

ஏற்கனவே மின்சார வாரியம் சூறைக்காற்று வீசுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை ஏற்படுத்தி பொதுமக்களின் பாதுகாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையால் இந்த ராட்சத பேனர் விழுந்த பகுதியில் மின் கம்பம் சேதம் ஆகி பொதுமக்களுக்கு எந்தவித தீங்கின்றி நல் வாய்ப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து மணிமங்கலம் காவல் துறையினர் மற்றும் மின்சார வாரியத் துறையினர் இணைந்து உடனடியாக விழுந்த ராட்சத பேனர்களை அகற்றி மின் இணைப்பு வழங்கும் பணிக்கு காவல்துறையினர் உதவினர்.

இந்நிலையில் இது போன்று பேனர்கள் விபத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முறையாக இதனை அனுமதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்து கூறிய பாதுகாப்பு உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்